கருவூர் – ஆலயங்கள்

கருவூர் மாவட்டத்தில்  உள்ள பழமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு…

கருவூர் நகரில் உள்ள ஆலயங்கள்.

  • அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு வலங்கியம்மன் ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு கச்சேரிப் பிள்ளையார் ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு அபயப் பிரதான ரங்கநாதர் ஆலயம்.                                          ( வித்துவக்கோட்டம் – கருவூர் )
  • அருள்மிகு வஞ்சியம்மன் ஆலயம். ( கருவூர் )
  • அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம். ( கருவூர் )

கருவூர் நகரின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள்.

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம்.                                          ( வெண்ணெய்மலை )
  • அருள்மிகு கோடீசுவரர் ஆலயம். ( 5 ரோடு – கருவூர் )
  • அருள்மிகு ஆதி மாரியம்மன் ஆலயம். ( சுங்ககேட் – கருவூர் )
  • அருள்மிகு கல்யாண வேங்கடரமண சுவாமி ஆலயம்.                            ( தான்தோன்றிமலை )
  • அருள்மிகு ஊரணி காளியம்மன் ஆலயம்.                                                   ( தான்தோன்றிமலை )
  • அருள்மிகு திருமாலீசுவரர் ஆலயம். ( திருமாநிலையூர் )
  • அருள்மிகு வஞ்சுளீசுவரர் ஆலயம். ( பிரம்ம தீர்த்தம் சாலை  – கருவூர் )

கருவூர் மாவட்டத்தில் நகரத்தில் இருந்து தொலைவில் உள்ள ஆலயங்கள். ( குளித்தலை வட்டம் உள்பட )

  • அருள்மிகு மணிகண்டீசுவரர் ஆலயம். ( மண்மங்கலம் )
  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். ( புகழி மலை – (ஆறுநாட்டார்மலை) )                                  ( புஞ்சைப்புகழூர்)
  • அருள்மிகு மேகவாலீசுவரர் ஆலயம். ( நஞ்சைப்புகழூர் )
  • அருள்மிகு சிந்தாமணி ஈசுவரர் ஆலயம். ( நன்னியூர் )
  • அருள்மிகு ரவீசுவரர் ஆலயம். ( வாங்கல் )
  • அருள்மிகு அக்னீசுவரர் ஆலயம். ( நெரூர் – வடக்கு )
  • அருள்மிகு காசிவிசுவநாதர் ஆலயம். ( நெரூர் – தெற்கு )
  • அருள்மிகு  அகத்தீசுவரர்  ஆலயம். ( திருமுக்கூடலூர் )
  • அருள்மிகு பரமேசுவரர் ஆலயம். ( பஞ்சமாதேவி )
  • அருள்மிகு விருத்தாசலேசுவரர் ஆலயம். ( சேனப்பிரட்டை – ( சனப்பிரட்டி ) )
  • அருள்மிகு வியாக்கிரபுரீசுவரர் ஆலயம். ( புலியூர் )
  • அருள்மிகு விசுவநாதர் ஆலயம். ( ரங்கநாதபுரம் – ( கட்டளை ) – கருவூர் )
  • அருள்மிகு கைலாசநாதர் ஆலயம். ( ரங்கநாதபுரம் – ( கட்டளை ) – கருவூர் )
  • அருள்மிகு மத்தியபுரீசுவரர் ஆலயம். ( மணவாசி – கருவூர் )
  • அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன் ஆலயம். ( மாயனூர் )
  • அருள்மிகு திருமுக்கண்மாலீசுவரர் ஆலயம். ( சித்தலவாய் – (கிருஷ்ணராயபுரம்) )
  • அருள்மிகு செம்பொற்சோதீசுவரர் ஆலயம். ( லாலாப்பேட்டை )
  • அருள்மிகு சிம்மபுரீசுவரர் ஆலயம். ( கருப்பத்தூர் – லாலாப்பேட்டை )
  • அருள்மிகு மல்லிகார்ச்சுனேசுவரர் ஆலயம். ( வடியம்- குளித்தலை )
  • அருள்மிகு கடம்பவன நாதர் ஆலயம். ( குளித்தலை )
  • அருள்மிகு விசுவநாதர் ஆலயம். ( மணத்தட்டை – குளித்தலை )
  • அருள்மிகு மத்தியார்ச்சுனேசுவரர் ஆலயம். ( இராஜேந்திரம் – குளித்தலை )
  • அருள்மிகு சுந்தரேசுவரர் ஆலயம். ( மருதூர் – குளித்தலை )
  • அருள்மிகு சிதம்பரேசுவரர் ஆலயம். ( பொய்யமணி – குளித்தலை )
  • அருள்மிகு சுந்தரேசுவரர் ஆலயம். ( நங்கவரம் – குளித்தலை )
  • அருள்மிகு இரத்தினகிரீசுவரர் ஆலயம். ( அய்யர்மலை )
  • அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். ( தோகைமலை )
  • அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம். ( தோகைமலை )
  • அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். ( கழுகூர் – தோகைமலை )
  • அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்.   ( சேங்கல் – கருவூர் )
  • அருள்மிகு கல்யாண விகிர்தீசுவரர் ஆலயம்.                                              ( வெஞ்சமாக்கூடலூர் – கருவூர் )
  • அருள்மிகு வீரபாண்டீசுவரர் ஆலயம். ( மூக்கணாங்குறிச்சி – அரவக்குறிச்சி )
  • அருள்மிகு காசிவிசுவநாதர் ஆலயம். ( அரவக்குறிச்சி )
  • அருள்மிகு மகாபலேசுவரர் ஆலயம். ( நாகம்பள்ளி – அரவக்குறிச்சி )
  • அருள்மிகு காசிவிசுவநாதர்  ஆலயம். ( இராசபுரம் – அரவக்குறிச்சி  )
  • அருள்மிகு மெய்ப்பொருள்நாதர் ஆலயம். ( மொடக்கூர்(மேற்கு) – பள்ளப்பட்டி )
  • அருள்மிகு காசிவிசுவநாதர் ஆலயம். ( ஆண்டான் கோவில் )
  • அருள்மிகு மணிமுக்தீசுவரர் ஆலயம். ( சின்ன தாராபுரம் )
  • அருள்மிகு சாடீசுவரர் ஆலயம். ( மு.பரமத்தி )
  • அருள்மிகு மரகதலீசுவரர் ஆலயம். ( முன்னூர் – பரமத்தி )
  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். ( பாலமலை )
  • அருள்மிகு புட்பவனநாதர் ஆலயம். ( புன்னம் )

குறிப்பு :

தெரிந்தவரை ஆலயங்களைத் தொகுத்துள்ளோம்.மேற்கண்ட ஆலயங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் மற்றொரு பதிவில் வெளியிடப்படும்.

தளத்தைப் பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்த,மேற்கண்ட தொகுப்பில் விடுபட்ட ஆலயங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  சிவாலயங்கள்,அம்மன் ஆலயங்கள்,விநாயகர் ஆலயங்கள், முருகன் ஆலயங்கள்,திருமால் ஆலயங்கள் எவையாக இருப்பினும் பகிரவும்.(தற்காலத்தில் கட்டப்படும்  நாகரிக ஆலயங்களைத் தவிர்க்கவும்)

கரூர் வரலாறு : இணையங்களில்

விக்கிபீடியா:

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

Chera Rulers:

Karur was ruled by different Chera kings. Kongu Cheras (capital:Karur (Vanji), ruling nearly the whole of old Kongu – lineage unclear- Cheran kootam) [2]

Ruler Name Reign
Vanavaramban [430-350 BC]
Kuttuvan Uthiyan Cheralathan [350-328 BC]
Imayavaramban Neduncheralathan [328-270 BC]
Palyaanai Chelkezhu Kuttuvan [270-245 BC]
Kalangaikanni narmudicheral [245-220 BC]
Perumcheralathan [220-200 BC]
Kudakko Neduncheralathan [200-180 BC]
Kadal Pirakottiya Velkezhu kuttuvan [180-125 BC]
Adukotpattuch Cheralathan [125-87 BC]
Selvak kadungo Vazhiyathan [87-62 BC] selva cheralathan [93-still now bc]

As found in Allahabad inscriptions of Samudragupta.

கரூரை ஆண்ட சேர மன்னர்களைப் பற்றி மேலும்  தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும்.

http://karurmakkalkalam.blog.com/வரலாற்றுக்களம்

கரூரின் சமீபத்திய தகவல்களைத் தெரிந்து கொள்ள :

http://karurmavattam.blogspot.in/

தொடரும்…

கருவுரானிலைத் தேவாரப் பதிகம்

திருச்சிற்றம்பலம்

திருக்கருவூரானிலை

பாடல் எண் : 1

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் .

குறிப்புரை :

தொண்டு எலாம் – தொண்டர் எல்லாரும் . உண்டல் – உண்ணல் , உண்டலாருமாம் . ஆருயிர் – அரியவுயிர் , உயிர்க்குயிர் . கண்டு அனார் – கண்டுபோலினிப்பவர் . திருக்கருவூரில் உள்ள திருக் கோயில் ஆநிலை , ஆன்நிலை எனப்படும் , பசுபதி என்னுந் திருப்பெய ருண்மை உணர்க . அண்டனார் – தேவர் . அன்பர் – அன்பையுடையர் .

பாடல் எண் : 2

நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே.

பொழிப்புரை :

நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

குறிப்புரை :

நீதியார் – நீதியே வடிவான சிவபெருமான். நினைந்து ஆய நான்மறை ஓதியார் – எண்ணி ஆராய்ந்த நான்கு மறைகளை ஓதுவார், கூடலார் – கூடுவார். குழைக்காதினார் – குழையணிந்த திருச்செவியை உடையவர். குழை தோட்டின் வேறானது; இதனைக் `குழையும் சுருள்தோடும்` என்ற திருவாசகத்தானறிக. ஆதியார் – முதல்வர். அடியார்தம் அன்பர் – அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.

பாடல் எண் : 3

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

பொழிப்புரை :

வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.

குறிப்புரை :

விண் – ஆகாயம். சூடி – வினையெச்சம். வேதமே பண் உளார் – வேதத்தில் சுரரூபமாக இருப்பவர். பரம் ஆய பண்பினர் – மேலாகிய பண்பை உடையவர். பண்பு – எண்குணம். கண்ணுள் – கூத்து. கண்ணுளார் – கூத்தர். கண் – உளார். உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவர். பண்பினர்கண் உளாருமாம். அண்ணலார் – தலைவர், பெரியர். அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயர்களுள் ஒன்று.

பாடல் எண் : 4

முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

குறிப்புரை :

முடியர் – சடைமுடிஉடையவர். வணங்குவோர் உச்சியருமாம் (பதி.162 `உச்சியார்`) மும்மதம் – கன்னம், கோசம், கை என்னும் மூன்றிடத்தும் ஒழுகும் மதநீர், `கன்னமும் கோசமும் கையும் என்னும், இன்னமுத்தானத்து இழிவன மும்மதம்`-(பொருட்டொகை நிகண்டு) ஈர்த்தல் – உரித்தல். ஈர் உரி – உரித்த தோல். உரியென்பது முதனிலைத் தொழிலாகு பெயர். பொடியர் – திருவெண்பொடியை உடையவர். உரியை அணிந்த பொடியர். வேளை – மன்மதனை, கருவேளை. செற்றவர் – அழித்தவர். கடி – சிறப்பு, அதிசயம். யாவையும் ஆய ஈசர் – `ஒருவனே எல்லாமாகி அல்லனாய் உடனுமாவான்`(சித்தி . 46)`முழுதுமாகிய மூர்த்தி`(பா .9).

பாடல் எண் : 5

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

பொழிப்புரை :

தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் .

குறிப்புரை :

பங்கயம் – ( சேற்றில் முளைப்பது ) தாமரை . மலர்ப் பாதர் – மலர் போன்ற திருவடியை உடையவர் . பாதி ஓர் மங்கையர் – அர்த்தநாரீச்சுரர் . மணி – அழகிய . வான் கங்கையர் – ஆகாச கங்கையை அணிந்தவர் . அம் – அழகு . ஆடு அரவத்து – ஆடுகின்ற பாம்பை உடைய .

பாடல் எண் : 6

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

பொழிப்புரை :

தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.

குறிப்புரை :

சென்னி – தலை. மேவர் – பொருந்துதலை உடையவர். வில்லியர் – மேருவாகிய வில்லை உடையவர். மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – அயன் முதலிய மூவருமாகிய சக்தியை உடையவர் அல்லரோ. மொய்ம்பு – சக்தி.

பாடல் எண் : 7

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளு நாதரே.

பொழிப்புரை :

பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.

குறிப்புரை :

பண்ணினார் – பண்ணாயிருப்பவர். படி ஏற்றார் – படி (ந்து அமர்)தற்குரிய விடையை உடையவர். மெய்ப்பெண்ணினார் – பெண்ணை ஒருபாற் கொண்ட மெய்யார். மெய் – உடம்பு. நெற்றியர் – உச்சியர். கண்ணினார் – உலகுக்கொரு கண்ணாயிருப்பவர், ஞானக்கண்ணருமாம். நண்ணினார் – சேர்ந்தார். நமை – நம்மை. நாதர் – தலைவர், உடையவர்.

பாடல் எண் : 8

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

பொழிப்புரை :

வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

குறிப்புரை :

கடுத்த – கோபித்த. தலை தோளும் – தலைகளும் தோள்களும். தாள் – திருவடி. அருள்கொடுத்தவன் என்க.

பாடல் எண் : 9

உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

பொழிப்புரை :

எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

ஏனம் – பன்றி. கழுதினான் – பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி – `யாவையும் ஆய ஈசர்` (பா .4).

பாடல் எண் : 10

புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

குறிப்புரை :

ஆதர் – அறிவிலார். மெய்ப்பத்தர் – உண்மை அன்பர். அத்தர் – இறைவர், உயர்ந்தவர்.

பாடல் எண் : 11

கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.

குறிப்புரை :

கந்தம் – வாசனை. துயர் ஆய – துன்பமானவை.